இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1016 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّارَ فَأَعْرَضَ وَأَشَاحَ ثُمَّ قَالَ ‏"‏ اتَّقُوا النَّارَ ‏"‏ ‏.‏ ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ كَأَنَّمَا يَنْظُرُ إِلَيْهَا ثُمَّ قَالَ ‏"‏ اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ ‏"‏ ‏.‏ وَلَمْ يَذْكُرْ أَبُو كُرَيْبٍ كَأَنَّمَا وَقَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الأَعْمَشُ ‏.‏
அதீ இப்னு ஹாத்திம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அவர்கள் (அதன் பயங்கரத்தால்) தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்; மேலும் (அதிலிருந்து) விலகிக்கொண்டார்கள். பின்னர், "நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) அவர்கள் தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்; (அதிலிருந்து) விலகிக்கொண்டார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்கள் அதை (நரகத்தை) உற்றுப் பார்ப்பது போன்று நாங்கள் எண்ணினோம். பின்னர், "பேரீச்சம்பழத்தின் ஒரு துண்டைக் கொண்டாயினும் நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள். எவரிடம் அதுவும் இல்லையோ அவர் இனிய சொற்களைக் கொண்டாவது (தன்னைக் காத்துக்கொள்ளட்டும்)" என்று கூறினார்கள்.

அபூ குறைப் (தம் அறிவிப்பில்) 'போல்' (கஅன்னமா) என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح