حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَثَلِ الْبَهِيمَةِ تُنْتَجُ الْبَهِيمَةَ، هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாமிய இயற்கை மார்க்கத்தில்தான் (அதாவது அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு எவரையும் வணங்காத நிலையில்) பிறக்கிறது. அவனுடைய பெற்றோர்கள்தான் அவனை யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ, அல்லது மஜூசியாகவோ மாற்றிவிடுகின்றனர். ஒரு பிராணி, அங்கக் குறைபாடற்ற முழுமையான குட்டியை ஈன்றெடுப்பதைப் போல. அதில் நீங்கள் ஏதேனும் அங்கச் சிதைவைக் காண்கிறீர்களா?"