இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4613ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا مَالِكُ بْنُ سُعَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنِ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ ‏{‏لاَ يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ‏}‏ فِي قَوْلِ الرَّجُلِ لاَ وَاللَّهِ، وَبَلَى وَاللَّهِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"(உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான்.)" (5:89) என்ற இந்த வசனம், ஒரு மனிதர் (தனது பேச்சின் போது) "இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக," என்றும், "ஆம், அல்லாஹ்வின் மீது சத்தியமாக," என்றும் கூறுவதைப் பற்றி வஹீ (இறைச்செய்தி)யாக அருளப்பட்டது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح