நபி (ஸல்) அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் வெயிலில் நின்று கொண்டிருந்தார். அவர் (நபி (ஸல்) அவர்கள்) அம்மனிதரைப் பற்றி கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'இவர் அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டேயிருக்கவும், உட்காராமலும், நிழலுக்குச் செல்லாமலும், பேசாமலும் இருந்து நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்துள்ளார்' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவருக்குப் பேசுமாறும், நிழலுக்குச் செல்லுமாறும், உட்காருமாறும் கூறி, அவருடைய நோன்பை நிறைவு செய்யச் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்.