حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ جَلَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதையில் இருந்த ஒருவரை பேரீச்ச மட்டைகளாலும் செருப்புகளாலும் அடித்தார்கள். மேலும் அபூபக்கர் (ரழி) அவர்கள் போதையில் இருந்த ஒருவருக்கு நாற்பது கசையடிகள் கொடுத்தார்கள்.