حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، يَقُولُ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، سَمِعَ عُمَرَ ـ رضى الله عنه ـ يَقُولُ عَلَى الْمِنْبَرِ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لاَ تُطْرُونِي كَمَا أَطْرَتِ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ .
உமர் (ரழி) அவர்கள் மிம்பரின் மீதிருந்தவாறு அறிவித்தார்கள்: நான் நபி (ஸல்) அவர்கள், "கிறிஸ்தவர்கள் மர்யமின் மகனை (ஈஸா (அலை) அவர்களை) வரம்பு மீறிப் புகழ்ந்தது போன்று, என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். ஏனெனில், நான் அவனுடைய அடியான் மட்டுமே. ஆகவே, 'அல்லாஹ்வின் அடியான்' என்றும் 'அவனுடைய தூதர்' என்றும் கூறுங்கள்" என்று கூறக் கேட்டேன்.