இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4819சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ امْرَأَتَيْنِ، مِنْ هُذَيْلٍ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَمَتْ إِحْدَاهُمَا الأُخْرَى فَطَرَحَتْ جَنِينَهَا فَقَضَى فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِغُرَّةٍ عَبْدٍ أَوْ وَلِيدَةٍ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹுதைல் கோத்திரத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருத்தி மற்றவள் மீது எதையோ எறிந்து, அவளுக்குக் கருச்சிதைவை ஏற்படுத்தினாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அதற்காக ஓர் ஆண் அடிமை அல்லது ஒரு பெண் அடிமையை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)