ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒருவர் பள்ளிவாசலுக்கு அம்புகளுடன் வந்தார். அவற்றின் இரும்பு முனைகள் மூடப்படாமல் வெளியே தெரிந்தன. எனவே, எந்த முஸ்லிமுக்கும் அவை தீங்கு விளைவிக்காத வண்ணம், அவற்றின் கூர்மையான முனைகளைப் பிடித்துக் கொள்ளுமாறு அவர் கட்டளையிடப்பட்டார்.