ஒரு மனிதர் கேட்டார், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! ஒருவர் தம் மனைவியுடன் இன்னொரு ஆடவரைக் கண்டால், (அவர்கள் விபச்சாரம் செய்துகொண்டிருக்கையில்) கணவன் அவரைக் கொன்றுவிடலாமா?"
பின்னர் நான் அவர்களை (அந்த மனிதரையும் அவருடைய மனைவியையும்) பள்ளிவாசலில் லிஆன் செய்வதை (ஒருவர் குற்றம் சாட்ட, மற்றவர் விபச்சாரத்தை மறுத்து சத்தியங்கள் செய்துகொள்வதை) பார்த்தேன்.