அபூ ஹுரைரா (ரழி) கூறினார்கள்:
"ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'ஜிஹாதுக்கு நிகரான ஒரு செயலை எனக்கு அறிவியுங்கள்' என்று கூறினார். அதற்கு அவர்கள், 'நான் (அதுபோன்ற ஒரு செயலை) காணவில்லை. முஜாஹித் (போருக்குப்) புறப்பட்டுச் சென்றிருக்கும்போது, உம்மால் பள்ளிவாசலுக்குள் நுழைந்து, சற்றும் ஓய்வெடுக்காமல் தொழுகையில் நிற்கவும், நோன்பை முறிக்காமல் நோன்பு நோற்கவும் முடியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'யாரால் அவ்வாறு செய்ய இயலும்?' என்று கூறினார்."