இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குதிரைகளைப் (பந்தயத்திற்காகப்) பழக்கப்படுத்தினார்கள். அவ்வாறு பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகளை ஹஃப்யாவிலிருந்து தநிய்யத்துல்-வதா வரையிலும், அவ்வாறு பழக்கப்படுத்தப்படாத குதிரைகளை தநிய்யத்துல்-வதாவிலிருந்து பனூ ஸுரைக் பள்ளிவாசல் வரையிலும் பந்தயத்திற்கு விடுவார்கள்.”