இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3796ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتِ الأَنْصَارُ يَوْمَ الْخَنْدَقِ تَقُولُ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدَا عَلَى الْجِهَادِ مَا حَيِينَا أَبَدَا فَأَجَابَهُمُ اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَهْ فَأَكْرِمِ الأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ
அனஸ் பின் மாலிக் (ரழி) அறிவித்தார்கள்:
அகழ் யுத்த (கந்தக்) நாளில் அன்ஸார்கள், "நாங்கள் உயிருடன் இருக்கும் வரை (இஸ்லாத்திற்காகப் போராடவும், தியாகம் செய்யவும்) முஹம்மத் (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்தவர்கள் நாங்கள்" என்று கூறிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹும்ம லா ஐஷ இல்லா ஐஷுல் ஆகிரா, ஃப அக்ரிமில் அன்ஸார வல் முஹாஜிரா" (யா அல்லாஹ்! மறுமையின் வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை; ஆகவே, அன்ஸார்களையும் முஹாஜிர்களையும் கண்ணியப்படுத்துவாயாக) என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح