حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، وَفَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، رضى الله عنها صَنَعْتُ سُفْرَةً لِلنَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ حِينَ أَرَادَا الْمَدِينَةَ، فَقُلْتُ لأَبِي مَا أَجِدُ شَيْئًا أَرْبُطُهُ إِلاَّ نِطَاقِي. قَالَ فَشُقِّيهِ. فَفَعَلْتُ، فَسُمِّيتُ ذَاتَ النِّطَاقَيْنِ.
அஸ்மா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரழி) அவர்களும் மதீனாவிற்குச் செல்ல (ஹிஜ்ரத் செய்ய) நாடியபோது, நான் அவர்களுக்காகப் பயண உணவைத் தயாரித்தேன். நான் என் தந்தையிடம், “அதைக்கட்டுவதற்கு (பயண உணவை) என் இடுப்புக் கச்சையைத் தவிர வேறு எதையும் நான் காணவில்லை” என்று கூறினேன். அதற்கு அவர், “அதை இரண்டாகக் கிழித்துவிடு” என்று கூறினார். நான் அவ்வாறே செய்தேன். எனவே, நான் 'தாத்துன் நிதாக்கைன்' (இரு கச்சையுடையவள்) என்று பெயரிடப்பட்டேன்.