நான் ஒரு இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். மேலும் நான் அவர்களுக்குத் தண்ணீரும், அவர்களுக்குத் தேவையானவற்றையும் கொண்டு வந்தேன். அவர்கள் என்னிடம் கூறினார்கள்: (நீர் விரும்பும் எதையும்) கேளும். நான் கூறினேன்: நான் சொர்க்கத்தில் உங்களுடைய தோழமையை வேண்டுகிறேன். அவர்கள் (நபியவர்கள்) கூறினார்கள்: அல்லது இது தவிர வேறு ஏதேனும் வேண்டுமா? நான் கூறினேன்: (எனக்குத் தேவையானது) அவ்வளவுதான். அவர்கள் கூறினார்கள்: அப்படியானால், நீர் அதிகமாக ஸஜ்தா (சிரவணக்கம்) செய்வதன் மூலம், உமக்காக இதனை (நான் பெற்றுத் தருவதற்கு) எனக்கு உதவுங்கள்.