இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1069 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدٍ، - وَهُوَ ابْنُ زِيَادٍ - سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ أَخَذَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ فَجَعَلَهَا فِي فِيهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ كِخْ كِخْ ارْمِ بِهَا أَمَا عَلِمْتَ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ ‏ ‏ ‏.‏
அபு ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஹஸன் இப்னு அலி (ரழி) அவர்கள் ஸதக்காவின் பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து தமது வாயில் வைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விடு, விடு, அதை எறிந்துவிடு. நாம் ஸதக்காவை உண்பதில்லை என்பது உனக்குத் தெரியாதா?

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1069 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنْ وَكِيعٍ، عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ ‏ ‏ أَنَّا لاَ، تَحِلُّ لَنَا الصَّدَقَةُ ‏ ‏ ‏.‏
இந்த ஹதீஸ் ஷுஃபா அவர்கள் வாயிலாக இதே அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளது; (அதில் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள்) வருமாறு:

"எங்களுக்கு சதகா ஆகுமானதல்ல."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1069 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ، أَبِي عَدِيٍّ كِلاَهُمَا عَنْ شُعْبَةَ، فِي هَذَا الإِسْنَادِ كَمَا قَالَ ابْنُ مُعَاذٍ ‏ ‏ أَنَّا لاَ، نَأْكُلُ الصَّدَقَةَ ‏ ‏ ‏.‏
இதே ஹதீஸ் ஸபுஃபா அவர்கள் வழியாக அதே அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح