அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக என் தந்தையின் குடும்பத்தார் - அதாவது (இஸ்லாமை ஏற்காத) இன்னின்னார் - எனக்கு உற்ற நேசர்கள் (மற்றும் பாதுகாவலர்கள்) அல்லர். நிச்சயமாக அல்லாஹ்வும், நம்பிக்கையாளர்களிலுள்ள நல்லோருமே எனக்கு உற்ற நேசர்கள் (மற்றும் பாதுகாவலர்கள்) ஆவார்கள்" என்று கூறுவதை இரகசியமாக அல்லாமல், தெளிவாகக் கேட்டேன்.