நான் அபூ மூஸா (ரழி) அவர்களிடம், ஃபழ்ல் பின் அப்பாஸ் அவர்களுடைய மகளின் வீட்டில் இருந்தபோது சென்றேன். அப்போது நான் தும்மினேன்; ஆனால் அவர் எனக்கு ‘யர்ஹமுகல்லாஹ்’ (அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக) என்று மறுமொழி கூறவில்லை. பிறகு அப்பெண் தும்மினார்; அவருக்கு அபூ மூஸா (ரழி) ‘யர்ஹமுகல்லாஹ்’ என்று மறுமொழி கூறினார்கள்.
நான் என் தாயிடம் திரும்பிச் சென்று இச்செய்தியைத் தெரிவித்தேன். பிறகு அபூ மூஸா (ரழி) என் தாயிடம் வந்தபோது, என் தாய் அவரிடம், "என் மகன் தங்களிடத்தில் தும்மினான்; அவனுக்கு நீங்கள் ‘யர்ஹமுகல்லாஹ்’ கூறவில்லை. ஆனால் அப்பெண் தும்மியபோது அவருக்கு ‘யர்ஹமுகல்லாஹ்’ கூறினீர்கள் (ஏன்?)" என்று கேட்டார்.
அதற்கு அபூ மூஸா (ரழி), "உன் மகன் தும்மினான்; ஆனால் அவன் அல்லாஹ்வைப் புகழவில்லை. எனவே நான் அவனுக்கு ‘யர்ஹமுகல்லாஹ்’ கூறவில்லை. ஆனால் அப்பெண் தும்மினார்; அவர் அல்லாஹ்வைப் புகழ்ந்தார். எனவே அவருக்கு ‘யர்ஹமுகல்லாஹ்’ கூறினேன். ஏனெனில், 'உங்களில் ஒருவர் தும்மி, அல்லாஹ்வைப் புகழ்ந்தால் (அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால்) அவருக்கு நீங்கள் ‘யர்ஹமுகல்லாஹ்’ என்று கூறுங்கள். அவர் அல்லாஹ்வைப் புகழவில்லை என்றால், அவருக்கு நீங்கள் ‘யர்ஹமுகல்லாஹ்’ கூறாதீர்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்று பதிலளித்தார்கள்.