அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் ஒரு ஜனாஸாவில் கலந்துகொண்டு, தொழுகை நிறைவேற்றப்படும் வரை இருக்கிறாரோ, அவருக்கு ஒரு கீராத் உண்டு. யார் அது அடக்கம் செய்யப்படும் வரை இருக்கிறாரோ, அவருக்கு இரண்டு கீராத்துகள் உண்டு.'" "அல்லாஹ்வின் தூதரே! அந்த இரண்டு கீராத்துகள் யாவை?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "இரண்டு பெரிய மலைகளைப் போன்றவை" என்று கூறினார்கள்.