நான் அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன்; அவர்கள் தொழுகைக்காக உளூச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தமது கையை அக்குள் வரை எட்டும் அளவுக்கு நீட்டினார்கள். நான் அவர்களிடம், "அபூ ஹுரைரா அவர்களே! இது என்ன உளூ?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பனூ ஃபர்ரூக் குலத்தரே! நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்? நீங்கள் இங்கே இருப்பது தெரிந்திருந்தால் நான் இந்த உளூவைச் செய்திருக்க மாட்டேன். 'உளூவின் (தண்ணீர்) சென்றடையும் இடம் வரை ஒரு முஃமினுக்கு (சொர்க்கத்தின்) அணிகலன்கள் சென்றடையும்' என்று என் உற்ற தோழர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
நான் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் தொழுகைக்காக வுழூ செய்தபோது அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். அவர்கள் தமது கையை அக்குள் வரை கழுவினார்கள். நான், 'ஓ அபூ ஹுரைரா! இது என்ன வுழூ?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னிடம், 'ஓ பனீ ஃபர்ரூக்! நீங்கள் இங்கே இருக்கிறீர்களா! நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் இவ்வாறு வுழூ செய்திருக்க மாட்டேன். எனது நெருங்கிய நண்பரான (அதாவது, நபி (ஸல்) அவர்கள்), "ஒரு முஃமினின் ஆபரணங்கள் அவரது வுழூ சென்றடையும் இடம் வரை சென்றடையும்" என்று கூற நான் கேட்டிருக்கிறேன்' என்று கூறினார்கள்.