அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவரின் வாசலில் ஒரு நதி இருந்து, அதில் அவர் தினமும் ஐந்து முறை குளித்தால், அவரது அழுக்கில் ஏதேனும் மீதமிருக்குமா? சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவரது அழுக்கில் எதுவும் மீதமிருக்காது” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இதுவே ஐந்து நேரத் தொழுகைகளின் உதாரணமாகும்; இவற்றின் மூலம் அல்லாஹ் பாவங்களை அழிக்கிறான்” என்று கூறினார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பக்ர் என்பவரது அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் கூறுவதைத் தான் செவியுற்றதாக உள்ளது):
"உங்களில் ஒருவருடைய வீட்டு வாசலில் ஓர் ஆறு இருந்து, அதில் அவர் தினமும் ஐந்து முறை குளித்தால், அவருடைய மேனியில் அழுக்கு ஏதேனும் எஞ்சியிருக்குமா? சொல்லுங்கள்!"
அதற்குத் தோழர்கள், "அவருடைய மேனியில் எந்த அழுக்கும் எஞ்சியிராது" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "இதுவே ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இவற்றின் மூலம் அல்லாஹ் பாவங்களை அழிக்கிறான்" என்று கூறினார்கள்.