அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் ஒருவர் தமது இல்லத்தில் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பின்னர் அல்லாஹ்வின் ஃபராஇத் (கடமையான செயல்கள்)களில் ஒரு ஃபர்ளை (கடமையான செயல்) நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களில் ஓர் இல்லத்திற்கு நடந்து செல்கிறாரோ, அவர் எடுத்து வைக்கும் அடிகளில், ஓர் அடி ஒரு பாவத்தை அழிக்கும், மற்றோர் அடி ஒரு தகுதியை உயர்த்தும்.