நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மக்களிலேயே தொழுகுக்காக அதிக நற்கூலியைப் பெறுபவர்கள், (பள்ளிவாசலிலிருந்து) வெகு தொலைவிலிருந்து நடந்து வருபவர்களே! பிறகு அதற்கடுத்த தொலைவிலிருந்து வருபவர்கள். (தனியாகத்) தொழுதுவிட்டு உறங்குபவரை விட, இமாமுடன் தொழுவதற்காகக் காத்திருப்பவர் அதிக நற்கூலியைப் பெறுவார்."