ஜாபிர் பின் ஸமுரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, 'வானவர்கள் தங்களின் இறைவனிடம் வரிசை அமைத்து நிற்பதைப் போன்று நீங்கள் வரிசை அமைத்து நிற்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'வானவர்கள் தங்கள் இறைவனிடம் எவ்வாறு வரிசை அமைத்து நிற்பார்கள்?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'அவர்கள் முதல் வரிசையைப் பூர்த்தி செய்வார்கள்; மேலும் வரிசையில் நெருக்கமாக நிற்பார்கள்' என்று கூறினார்கள்."