அல்-பரா இப்னு ஆசிப் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரிசைகளுக்கு இடையில் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குச் சென்று, எங்கள் தோள்களையும் மார்புகளையும் தடவி, "(வரிசைகளில்) முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) உங்கள் உள்ளங்களும் முரண்பட்டுவிடும்" என்று கூறுவார்கள். மேலும் அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் முன் வரிசைகள் மீது அருள் புரிகின்றனர்" என்றும் கூறுவார்கள்.