நமிர் அவர்களின் சகோதரி மகன் அஸ்-ஸாயிப் (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் முஆவியா (ரழி) அவர்களுடன் மக்சூராவில் ஜுமுஆ தொழுகையைத் தொழுதேன். இமாம் ஸலாம் கொடுத்ததும், நான் இருந்த இடத்திலேயே எழுந்து நின்று (சுன்னத்) தொழுதேன். முஆவியா (ரழி) அவர்கள் (தம் இருப்பிடத்திற்குச்) சென்றதும், என்னிடம் ஆள் அனுப்பி, “நீர் செய்ததை இனி செய்யாதீர்! ஜுமுஆ தொழுதுவிட்டால், நீர் பேசும்வரை அல்லது (அவ்விடத்திலிருந்து) வெளியேறும்வரை அதைத் தொடர்ந்து (வேறொரு தொழுகையைத்) தொழாதீர்! ஏனெனில், நாம் பேசும்வரை அல்லது வெளியேறும்வரை, ஒரு தொழுகையை (இன்னொரு தொழுகையுடன்) இணைக்கக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று கூறினார்கள்.