இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1906 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي
أَبُو هَانِئٍ، حَدَّثَنِي أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
صلى الله عليه وسلم ‏ ‏ مَا مِنْ غَازِيَةٍ أَوْ سَرِيَّةٍ تَغْزُو فَتَغْنَمُ وَتَسْلَمُ إِلاَّ كَانُوا قَدْ تَعَجَّلُوا
ثُلُثَىْ أُجُورِهِمْ وَمَا مِنْ غَازِيَةٍ أَوْ سَرِيَّةٍ تُخْفِقُ وَتُصَابُ إِلاَّ تَمَّ أُجُورُهُمْ ‏ ‏ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எந்தவொரு பெரும்படையோ அல்லது சிறிய படைப்பிரிவோ (போருக்குச் சென்று), போர்ச்செல்வங்களை அடைந்து, பாதுகாப்பாகவும் திரும்பினால், அவர்கள் தங்களின் நற்கூலியில் மூன்றில் இரண்டு பங்கை முன்கூட்டியே பெற்றுக்கொண்டவர்களாவர். (மாறாக,) எந்தவொரு பெரும்படையோ அல்லது சிறிய படைப்பிரிவோ (போர்ச்செல்வம் ஏதுமின்றி) வெறுங்கையுடன் திரும்பி, (துன்பங்களால்) பீடிக்கப்பட்டால், அவர்களுக்குரிய நற்கூலி (மறுமையில்) முழுமைபெறுகிறது.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح