அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களுக்கு முன்னிருந்தவர்களில் ஒருவர் (மறுமை நாளில்) கணக்குக் கேட்கப்பட்டார். அவர் மக்களுடன் (வியாபாரம்) செய்பவராகவும் வசதி படைத்தவராகவும் இருந்தார் என்பதைத் தவிர, அவரிடம் நன்மையில் எதுவும் காணப்படவில்லை. அவர் தமது பணியாளர்களிடம், 'சிரமப்படுபவரிடம் (கடன் வசூலிப்பதை) விட்டுவிடுங்கள்' என்று கட்டளையிடுபவராக இருந்தார்.
ஆகவே கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், 'அவரை விட நாமே இதற்கு அதிகத் தகுதியுடையவர்கள்; எனவே அவரை(த் தண்டிப்பதிலிருந்து) மன்னித்துவிடுங்கள்' என்று கூறினான்."