நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "(அல்லாஹ்வின்) அடியான் ஒருவன், அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் ஒரு வார்த்தையை அவன் அதிகம் பொருட்படுத்தாமல் பேசக்கூடும். அதன் காரணமாக அல்லாஹ் அவனை பல படித்தரங்களுக்கு (நற்கூலியின்) உயர்த்துவான். (அல்லாஹ்வின்) அடியான் ஒருவன் (கவனக்குறைவாக) அல்லாஹ்வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் ஒரு வார்த்தையை அதன் பாரதூரத்தைப்பற்றி சிந்திக்காமலேயே பேசக்கூடும். அதன் காரணமாக அவன் நரக நெருப்பில் வீசப்படுவான்."