இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6067ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ مَا أَظُنُّ فُلاَنًا وَفُلاَنًا يَعْرِفَانِ مِنْ دِينِنَا شَيْئًا ‏ ‏‏.‏ قَالَ اللَّيْثُ كَانَا رَجُلَيْنِ مِنَ الْمُنَافِقِينَ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இன்னாரும் இன்னாரும் நமது மார்க்கத்தைப் பற்றி எதையும் அறிந்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை.” (அல்-லைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அவ்விருவரும் நயவஞ்சகர்களில் இருவராயிருந்தனர்.)
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح