عن ابن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : ليس المؤمن بالطعان، ولا اللعان، ولا الفاحش، ولا البذي . ((رواه الترمذي وقال حديث حسن)).
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உண்மையான இறைவிசுவாசி, (பிறரின் குறைகளைத்) தூற்றுபவனாகவோ, சபிப்பவனாகவோ, மானக்கேடாக (அநாகரிகமாக)ப் பேசுபவனாகவோ, (அசிங்கமான) தீய வார்த்தைகளைப் பேசுபவனாகவோ இருக்க மாட்டான்."