ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் இன்னாரை மன்னிக்கவே மாட்டான்' என்று கூறினார்.
அதற்கு உயர்ந்தோனாகிய அல்லாஹ், 'நான் இன்னாரை மன்னிக்க மாட்டேன் என்று என் மீது ஆணையிட்டு (என் முடிவை நிர்ணயிக்கும்) இவன் யார்? நிச்சயமாக நான் இன்னாரை மன்னித்துவிட்டேன்; மேலும், உனது செயல்களை நான் அழித்துவிட்டேன்' என்று கூறினான்."