அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், 'மக்கள் நாசமடைந்துவிட்டனர்' என்று கூறினால், அவரே அவர்களில் மிகவும் நாசமடைந்தவர் ஆவார். அபூ இஸ்ஹாக் கூறினார்கள்: அவர் 'அஹ்லக்கஹும்' என்றோ அல்லது 'அஹ்லக்குஹும்' என்றோ கூறினார்களா என்பது எனக்குத் தெரியாது.