இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2981 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي الْحَكَمُ بْنُ مُوسَى أَبُو صَالِحٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ،
عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ أَنَّ النَّاسَ نَزَلُوا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
عَلَى الْحِجْرِ أَرْضِ ثَمُودَ فَاسْتَقَوْا مِنْ آبَارِهَا وَعَجَنُوا بِهِ الْعَجِينَ فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم أَنْ يُهَرِيقُوا مَا اسْتَقَوْا وَيَعْلِفُوا الإِبِلَ الْعَجِينَ وَأَمَرَهُمْ أَنْ يَسْتَقُوا مِنَ الْبِئْرِ
الَّتِي كَانَتْ تَرِدُهَا النَّاقَةُ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஸமூது சமூகத்தினர் வசித்த இடமான ஹிஜ்ர் (பள்ளத்தாக்கில்) முகாமிட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அங்கிருந்த கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைத்துக்கொண்டார்கள்; அதைக் கொண்டு மாவும் பிசைந்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்கள் இறைத்து வைத்திருந்த தண்ணீரைக் கீழே ஊற்றிவிடுமாறும், அந்த மாவினை ஒட்டகங்களுக்குத் தீவனமாகக் கொடுத்துவிடுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும், (முன்பு) அந்தப் பெண் ஒட்டகம் தண்ணீர் அருந்த வந்து கொண்டிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح