அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது: "நற்செயல்களைச் செய்து, மக்களின் பாராட்டையும் பெற்ற ஒருவரைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?" அதற்கு அவர்கள் கூறினார்கள்: "அது ஒரு இறைநம்பிக்கையாளருக்குரிய நற்செய்தியாகும் (அதை அவர் இந்த அழியக்கூடிய இவ்வுலகில் பெற்றிருக்கிறார்)."