இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2658 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا أَبُو هِشَامٍ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا
سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏
كُتِبَ عَلَى ابْنِ آدَمَ نَصِيبُهُ مِنَ الزِّنَى مُدْرِكٌ ذَلِكَ لاَ مَحَالَةَ فَالْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ وَالأُذُنَانِ
زِنَاهُمَا الاِسْتِمَاعُ وَاللِّسَانُ زِنَاهُ الْكَلاَمُ وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا وَالْقَلْبُ
يَهْوَى وَيَتَمَنَّى وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆதமுடைய மகனுக்கு விபச்சாரத்தில் அவனது பங்கு எழுதப்பட்டுவிட்டது; அதை அவன் அடைந்தே தீருவான். கண்களின் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். காதுகளின் விபச்சாரம் (தவறானதை) செவிமடுத்தலாகும். நாவின் விபச்சாரம் (தவறானதை) பேசுவதாகும். கையின் விபச்சாரம் (தவறாகப்) பிடிப்பதாகும். காலின் விபச்சாரம் (தவறானதை நோக்கி) நடந்து செல்வதாகும். இதயம் ஏங்குகிறது; ஆசைப்படுகிறது. மர்ம உறுப்பு அதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்ப்பிக்கிறது.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح