இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

691ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ أَمَا يَخْشَى أَحَدُكُمْ ـ أَوْ لاَ يَخْشَى أَحَدُكُمْ ـ إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இமாமுக்கு முன்பாகத் தன் தலையை உயர்த்துபவர், அல்லாஹ் அவனுடைய தலையைக் கழுதையின் தலையாக அல்லது அவனுடைய உருவத்தை (முகத்தைக்) கழுதையின் உருவமாக மாற்றிவிடக்கூடும் என்று அஞ்சுவதில்லையா?"

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح