இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6307ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ وَاللَّهِ إِنِّي لأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைகளுக்கு அதிகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவனிடம் தவ்பா செய்கிறேன்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3666சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي رَاشِدٍ، عَنْ يَعْلَى الْعَامِرِيِّ، أَنَّهُ قَالَ جَاءَ الْحَسَنُ وَالْحُسَيْنُ يَسْعَيَانِ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَضَمَّهُمَا إِلَيْهِ وَقَالَ ‏ ‏ إِنَّ الْوَلَدَ مَبْخَلَةٌ مَجْبَنَةٌ ‏ ‏ ‏.‏
யஃலா அல்-ஆமிரீ (ரழி) அவர்கள் கூறியதாவது:
"ஹஸனும் ஹுஸைனும் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் ஓடி வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் அவர்களை அணைத்துக்கொண்டு, 'குழந்தைகள் ஒரு மனிதனைக் கஞ்சனாகவும் கோழையாகவும் ஆக்கிவிடுகின்றன' என்று கூறினார்கள்."

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)