حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا، حَتَّى مَاتَتْ جُوعًا، فَدَخَلَتْ فِيهَا النَّارَ ـ قَالَ فَقَالَ وَاللَّهُ أَعْلَمُ ـ لاَ أَنْتِ أَطْعَمْتِهَا وَلاَ سَقَيْتِهَا حِينَ حَبَسْتِيهَا، وَلاَ أَنْتِ أَرْسَلْتِيهَا فَأَكَلَتْ مِنْ خَشَاشِ الأَرْضِ .
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பெண், ஒரு பூனையின் காரணமாக வேதனை செய்யப்பட்டாள். அப்பூனை பசியால் சாகும் வரை அவள் அதை அடைத்து வைத்திருந்தாள்; அதனால் அவள் நரகத்தில் நுழைந்தாள்.”
மேலும் (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: “(அல்லாஹ்வே மிக அறிந்தவன்!) ‘நீ அதை அடைத்து வைத்திருந்தபோது, அதற்கு நீ உணவளிக்கவுமில்லை; அதற்குத் தண்ணீர் புகட்டவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்பதற்காவது அதை நீ விடுவிக்கவுமில்லை’ (என்று அல்லாஹ் கூறினான்).”
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு பெண் ஒரு பூனையை அது சாகும் வரை அடைத்து வைத்திருந்த காரணத்தால் தண்டிக்கப்பட்டாள். அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அவள் அதை அடைத்து வைத்திருந்தபோது அதற்கு உணவோ தண்ணீரோ கொடுக்கவில்லை; பூமியிலுள்ள (சிறு) புழு பூச்சிகளைத் தின்பதற்கேனும் அதை அவள் விட்டுவிடவுமில்லை.”
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பெண் ஒரு பூனைக்காக வேதனை செய்யப்பட்டாள். (அதாவது,) அவள் அதைச் சாகும் வரை அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அவள் அதை அடைத்து வைத்திருந்தபோது, அதற்கு உணவளிக்கவுமில்லை; தண்ணீர் புகட்டவுமில்லை. பூமியிலுள்ள (சிறு பிராணிகள் மற்றும்) புழு பூச்சிகளைத் தின்பதற்கேனும் அவள் அதை விட்டுவிடவுமில்லை."
قَالَ الزُّهْرِيُّ وَحَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ : دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا فَلاَ هِيَ أَطْعَمَتْهَا وَلاَ هِيَ أَرْسَلَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ حَتَّى مَاتَتْ . قَالَ الزُّهْرِيُّ : لِئَلاَّ يَتَّكِلَ رَجُلٌ وَلاَ يَيْأَسَ رَجُلٌ .
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஹுமைத் இப்னு அப்துர் ரஹ்மான் எனக்கு அறிவித்தார்கள்: அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு பெண் ஒரு பூனையின் காரணமாக நரகத்தில் நுழைந்தாள். அவள் அதை கட்டி வைத்தாள். அவளோ அதற்கு உணவளிக்கவில்லை. பூமியில் உள்ள (சிறு) பூச்சிகளைத் தின்பதற்காக அவளோ அதை அவிழ்த்து விடவுமில்லை. அது சாகும் வரை (அப்படியே) இருந்தது.”
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “(இதை நான் அறிவிப்பது) எந்த மனிதனும் (தன் நற்செயல்களை மட்டுமே நம்பி) அலட்சியமாக இருக்காமலும், எந்த மனிதனும் (அல்லாஹ்வின் அருளை விட்டும்) நம்பிக்கை இழக்காமலும் இருப்பதற்காகவே.”