حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، {عَنْ أَبِيهِ،} عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا، وَلَوْ فِرْسِنَ شَاةٍ .
அபு ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஓ முஸ்லிம் பெண்களே! உங்களில் எவரும் தம் அண்டை வீட்டுப் பெண்மணி அனுப்பும் அன்பளிப்பை, அது ஆட்டுக்கால்களாக (சதையில்லாத கால் பகுதி) இருந்தாலும் கூட, அற்பமாகக் கருத வேண்டாம்."
الثامن: عنه قال رسول الله صلى الله عليه وسلم: يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرسن شاة ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
முஸ்லிம் பெண்களே, ஓர் ஆட்டின் குளம்பாக இருந்தாலும் கூட, உங்கள் அண்டை வீட்டுக்காரிக்கு நீங்கள் கொடுக்கும் எந்த அன்பளிப்பையும் அற்பமாகக் கருதாதீர்கள்.
وعنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرسن شاة ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "முஸ்லிம் பெண்களே! உங்களில் எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்குக் கொடுப்பதை, அது ஓர் ஆட்டின் கால் குளம்பாக இருந்தாலும் அற்பமாகக் கருத வேண்டாம்".