இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

241ரியாதுஸ் ஸாலிஹீன்
وعنه قال‏:‏ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول‏:‏ ‏ ‏كل أمتي معافًى إلا المجاهرين، وإن من المجاهرة أن يعمل الرجل بالليل عملاً، ثم يصبح وقد ستره الله عليه فيقول‏:‏ يا فلان عملت البارحة كذا وكذا، وقد بات يستره ربه، ويصبح يكشف ستر الله عنه‏ ‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என் சமூகத்தார் அனைவரும் மன்னிக்கப்படுவார்கள்; (தங்கள் பாவங்களை) பகிரங்கப்படுத்துபவர்களைத் தவிர. நிச்சயமாக, பகிரங்கப்படுத்துதலில் ஒரு வகை என்னவென்றால், ஒரு மனிதர் இரவில் ஒரு செயலைச் செய்கிறார்; அல்லாஹ் அதை அவருக்கு மறைத்திருக்கும் நிலையில் அவர் காலைப் பொழுதை அடைகிறார். அவரோ, 'இன்னாரே! நான் நேற்றிரவு இன்னின்னவாறு செய்தேன்' என்று கூறுகிறார். இரவு முழுவதும் அவருடைய இறைவன் அவரை மறைத்திருந்தான்; ஆனால் விடிந்ததும், அல்லாஹ் அவருக்கு இட்ட திரையை அவரே விலக்கிவிடுகிறார்."

(புகாரி, முஸ்லிம்)