இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6189ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ ابْنَ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ الْقَاسِمَ فَقَالُوا لاَ نَكْنِيكَ بِأَبِي الْقَاسِمِ، وَلاَ نُنْعِمُكَ عَيْنًا‏.‏ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ ‏ ‏ أَسْمِ ابْنَكَ عَبْدَ الرَّحْمَنِ ‏ ‏‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

எங்களில் ஒருவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவர் அக்குழந்தைக்கு அல்-காசிம் என்று பெயரிட்டார். மக்கள் (அவரிடம்), "நாங்கள் உங்களை அபுல் காசிம் என்று அழைக்க மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உங்களை மகிழ்விக்கவும் மாட்டோம்" என்று கூறினார்கள். அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அதை அவர்களிடம் குறிப்பிட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "உங்கள் மகனுக்கு அப்துர் ரஹ்மான் என்று பெயரிடுங்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2133 hஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، جَمِيعًا عَنْ سُفْيَانَ، قَالَ عَمْرٌو
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ وُلِدَ لِرَجُلٍ
مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ الْقَاسِمَ فَقُلْنَا لاَ نَكْنِيكَ أَبَا الْقَاسِمِ وَلاَ نُنْعِمُكَ عَيْنًا ‏.‏ فَأَتَى النَّبِيَّ صلى
الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ ‏ ‏ أَسْمِ ابْنَكَ عَبْدَ الرَّحْمَنِ ‏ ‏ ‏.‏
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
எங்களில் ஒருவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவர் அக்குழந்தைக்கு ‘காசிம்’ என்று பெயரிட்டார். எனவே நாங்கள், “உங்களை நாங்கள் ‘அபுல் காசிம்’ என்று அழைக்கமாட்டோம்; (அதன் மூலம்) உங்கள் கண்களைக் குளிரச் செய்யவும் மாட்டோம் (அதாவது, உங்களை மகிழ்விக்க மாட்டோம்)” என்று கூறினோம். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அது பற்றிக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமது மகனுக்கு ‘அப்துர் ரஹ்மான்’ என்று பெயரிடுவீராக!” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح