حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ضَحَّى بِكَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ يَذْبَحُ وَيُكَبِّرُ وَيُسَمِّي وَيَضَعُ رِجْلَهُ عَلَى صَفْحَتِهِمَا .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், கொம்புகளுள்ள, கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிறமுடைய இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களை அறுத்து, "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று கூறி, அல்லாஹ்வின் பெயரையும் குறிப்பிட்டு, அவற்றின் பக்கங்களில் தமது பாதத்தை வைத்துப் பலியிட்டார்கள்.