உஸைத் பின் ஹுளைர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அன்சாரிகளில் ஒருவர், (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இன்னாரை நியமித்தது போல் என்னையும் நியமிக்க மாட்டீர்களா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனக்குப் பிறகு (உங்களுக்குப் பதிலாக) மற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை நீங்கள் சந்திப்பீர்கள். ஆகவே, (மறுமை நாளில்) தடாகத்தின் (கவ்ஸர்) அருகே என்னைச் சந்திக்கும் வரை பொறுமையாக இருங்கள்."