அதீ பின் ஹாதிம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "(இரவின் கருமை என்ற) கறுப்பு நூலிலிருந்து (வைகறையின் ஒளி என்ற) வெண்ணூல் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை" என்ற வசனத்தைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் கூறினார்கள்: "அது இரவின் கருமையும், பகலின் வெண்மையும் ஆகும்."