அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் (உருவத்தில்) பெரிய, பருமனான ஒரு மனிதர் வருவார். அல்லாஹ்விடம் அவர் ஒரு கொசுவின் இறக்கை அளவுக்குக் கூட எடை இருக்கமாட்டார். நீங்கள் (விரும்பினால்), '**ஃபலா னுகீமு லஹும் யவ்மல் கியாமாத்தி வஸ்னா**' (மறுமை நாளில் அவர்களுக்கு நாம் எந்த எடையையும் ஏற்படுத்தமாட்டோம்) (18:105) என்று ஓதிக்கொள்ளுங்கள்."