அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான், "அல்லாஹ்வின் தூதரே! பாவங்களில் மிகப்பெரியது எது?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "உன்னைப் படைத்தவன் அல்லாஹ்வாக இருக்க, அவனுக்கு நீ இணையை ஏற்படுத்துவதாகும்" என்று கூறினார்கள்.
"பிறகு எது?" என்று (நான்) கேட்டேன்.
அதற்கு அவர்கள், "உன்னுடன் உண்பான் என்று அஞ்சி, உன் பிள்ளையை நீ கொல்வதாகும்" என்று கூறினார்கள்.
"பிறகு எது?" என்று (நான்) கேட்டேன்.
அதற்கு அவர்கள், "உன் அண்டை வீ்ட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வதாகும்" என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களின் கூற்றை உண்மைப்படுத்தும் விதமாக அல்லாஹ் (பின்வரும் வசனத்தை) அருளினான்:
*'வல்லதீன லா யத்ஊன மஅல்லாஹி இலாஹன் ஆகர'*
(இதன் பொருள்: "மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு எந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள்")
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவம் எது?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன்னை அல்லாஹ்வே படைத்திருக்க, அவனுக்கு நீ இணையை ஏற்படுத்துவதாகும்" என்று கூறினார்கள்.
"பிறகு எது?" என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள், "உன்னுடன் உண்பான் என்று (பயந்து) உன் பிள்ளையை நீ கொல்வதாகும்" என்று கூறினார்கள்.
"பிறகு எது?" என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள், "உன் அண்டை வீட்டார் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வதாகும்" என்று கூறினார்கள்.
ஆகவே, அல்லாஹ் இதை உண்மைப்படுத்தி (பின்வரும் வசனத்தை) அருளினான்:
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவம் எது?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணையை ஏற்படுத்துவது" என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், "பிறகு எது?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன்னுடன் உண்பான் என்பதற்காக உன் பிள்ளையைக் கொல்வது" என்று கூறினார்கள். அம்மனிதர், "பிறகு எது?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது" என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ் இதை மெய்ப்பிக்கும் விதமாக பின்வரும் வசனத்தை அருளினான்:
அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘பாவங்களில் மிகவும் கொடியது எது?’ என்று கேட்டேன்.” அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, நீ அவனுக்கு இணை வைப்பதுதான்” என்று பதிலளித்தார்கள். நான், “அதற்குப் பிறகு எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உனது குழந்தை உன்னுடன் (உணவில்) பங்கு கொள்ளும் என்று பயந்து, நீ அதைக் கொல்வது” என்று பதிலளித்தார்கள். நான், “அதற்குப் பிறகு எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உனது அண்டை வீட்டுக்காரரின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று பதிலளித்தார்கள். பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக அல்லாஹ் பின்வரும் குர்ஆன் வசனத்தை அருளினான்: “அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்க மாட்டார்கள்; அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரை நியாயமான காரணமன்றி கொல்ல மாட்டார்கள்; விபச்சாரம் செய்ய மாட்டார்கள்.”