இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6468ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُهُ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى لَنَا يَوْمًا الصَّلاَةَ، ثُمَّ رَقِيَ الْمِنْبَرَ فَأَشَارَ بِيَدِهِ قِبَلَ قِبْلَةِ الْمَسْجِدِ، فَقَالَ ‏ ‏ قَدْ أُرِيتُ الآنَ ـ مُنْذُ صَلَّيْتُ لَكُمُ الصَّلاَةَ ـ الْجَنَّةَ وَالنَّارَ مُمَثَّلَتَيْنِ فِي قُبُلِ هَذَا الْجِدَارِ، فَلَمْ أَرَ كَالْيَوْمِ فِي الْخَيْرِ وَالشَّرِّ، فَلَمْ أَرَ كَالْيَوْمِ فِي الْخَيْرِ وَالشَّرِّ ‏ ‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மிம்பரின் மீது ஏறி, தம் கையால் பள்ளிவாசலின் கிப்லாவை நோக்கிச் சுட்டிக்காட்டி, 'நான் உங்களுக்குத் தொழுகை நடத்திக்கொண்டிருந்தபோது, இதோ இந்தச் சுவரின் திசையில் சொர்க்கமும் நரகமும் எனக்கு முன் சித்தரிக்கப்பட்ட நிலையில் இப்போது காட்டப்பட்டன. நன்மையிலும் தீமையிலும் இன்றைய நாளைப் போன்று நான் (எதையும்) கண்டதில்லை; நன்மையிலும் தீமையிலும் இன்றைய நாளைப் போன்று நான் (எதையும்) கண்டதில்லை' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح