இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2092 dஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ،
أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ أَرَادَ أَنْ يَكْتُبَ إِلَى الْعَجَمِ فَقِيلَ لَهُ إِنَّ الْعَجَمَ لاَ يَقْبَلُونَ
إِلاَّ كِتَابًا عَلَيْهِ خَاتِمٌ ‏.‏ فَاصْطَنَعَ خَاتَمًا مِنْ فِضَّةٍ ‏.‏ قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ
‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரபியர் அல்லாதவர்களுக்கு (அரசர்களுக்கு) கடிதங்கள் (தூதுகள்) எழுத நாடினார்கள். அப்போது, “முத்திரையிடப்பட்ட கடிதத்தைத் தவிர வேறெதையும் அரபியர் அல்லாதவர்கள் ஏற்கமாட்டார்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டது. எனவே, அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்துகொண்டார்கள்.
அனஸ் (ரலி) மேலும் கூறினார்கள்: “அவர்களது (நபி (ஸல்) அவர்களின்) கையில் அதன் (வெள்ளி மோதிரத்தின்) வெண்மையை நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح