حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ كِسَاءً وَإِزَارًا غَلِيظًا فَقَالَتْ قُبِضَ رُوحُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذَيْنِ.
அபூ புர்தா அவர்கள் அறிவித்தார்கள்:
"ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் ஒரு கிஸாவையும், தடிமனான ஓர் இஸாரையும் கொண்டு வந்து, 'நபி (ஸல்) அவர்களின் உயிர் இவை இரண்டிலும் (இருந்த நிலையில்) தான் கைப்பற்றப்பட்டது' என்று கூறினார்கள்."
அபூ புர்தா அவர்கள் அறிவித்தார்கள்:
ஆயிஷா (ரழி) அவர்கள், ஒரு கீழாடையையும் ‘முலப்பதா’ எனும் மேலாடையையும் எங்களுக்கு எடுத்து வந்து காட்டி, "இந்த (ஆடைகளில்) தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது" என்று கூறினார்கள்.
இப்னு ஹாத்திம் (அறிவிப்பாளர்களில் ஒருவர்) அவர்களின் அறிவிப்பில், "(அது) தடிமனான கீழாடை" என்று இடம்பெற்றுள்ளது.