ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"இன்றிரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையை நான் நிச்சயமாகக் கவனிப்பேன்" (என்று எனக்குள் கூறிக் கொண்டேன்). அவர்கள் இரண்டு சுருக்கமான ரக்அத்கள் தொழுதார்கள்; பின்னர் இரண்டு நீண்ட, நீண்ட, நீண்ட ரக்அத்கள் தொழுதார்கள்; பின்னர் அதற்கு முந்திய இரண்டு ரக்அத்களை விடச் சுருக்கமான இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; பின்னர் அதற்கு முந்தியவற்றை விடச் சுருக்கமான இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; பின்னர் அதற்கு முந்தியவற்றை விடச் சுருக்கமான இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; பின்னர் அதற்கு முந்தியவற்றை விடச் சுருக்கமான இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; பின்னர் வித்ர் தொழுதார்கள். ஆக மொத்தம் பதின்மூன்று ரக்அத்கள்.